மருத்துவ இளநிலை படிப்புக்கான, 'நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு
மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு இளநிலை மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு, செப்டம்பர் 12ல் நடக்க உள்ளது. இதுவரை தமிழ் உட்பட, 11 மாநில மொழிகளில் தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தாண்டு, பஞ்சாபி மற்றும் மலையாள மொழிகளிலும் தேர்வு எழுதலாம். கொரோனா (Corona) பாதுகாப்பு நடவடிக்கையாக, 198 நகரங்களில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் தற்போது ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு!
இது குறித்து, தேர்வை நடத்தும் என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை, நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 10ம் தேதி மாலை 5:00 மணி வரை, neet.nta.nic.in என்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வுக்கான கட்டணத்தை, 10ம் தேதி இரவு 11:50 மணி வரை செலுத்தலாம். வரும் 11ம் தேதி முதல், 14ம் தேதி மதியம் 2:00 மணி வரை, ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்.
மேலும் படிக்க
EPFO புதிய வசதி: அவசரத் தேவைத்கு PF கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் முன்பணம்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவி பெற இணையதளம் அறிமுகம்!
Share your comments