பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில் வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் ஒப்பந்ததாரர்களை இறுதி செய்துள்ளதாக மத்திய அரசின் கூட்டுறவு வர்த்தக முகமையான நாஃபெட் (NAFED) தெரிவித்துள்ளது.
வெங்காயம் (Onion) மற்றும் உருளைக் கிழங்கு உள்ளிட்ட முக்கிய சமையல் உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையான ஏற்றம் கண்டுள்ளன.இதையடுத்து, உள்நாட்டில் சப்ளையை அதிகரிக்கச் செய்யும் விதமாகவும், வெங்காய விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கச் செய்யும் விதமாகவும் வெளிநாடுகளிலிருந்து வெங் காயங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில் விரைவாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயங்களை இறக்குமதி செய்யும் ஒப்பந்ததாரர்களை இறுதி செய்துள்ளதாக மத்திய அரசின் கூட்டுறவு வர்த்தக முகமையான நாஃபெட் தெரிவித்துள்ளது.
தேவையை சமாளிக்கத் திட்டம் (To Avoid Scarcity)
மொத்தம் 15,000 டன் வெங்காய இறக்குமதி இறுதி செய்யப்பட்டு அதுதொடர்பான ஆர்டர்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் நாஃபெட் தெரிவித்துள்ளது.துறைமுக நகரங்களில் வெங்காயம் இறக்குமதி செய்ய படும் என்பதால், வெங்காய சப்ளையை விரைவுபடுத்தும் விதமாக அந்தந்தக்காரங்காயின் மாநிலங்கள் வெங்காயத் தேவையைத் தெரிவிக்கும்படி
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் வெங்காயத்தை இறக்குமதி செய்யவும், டெண்டர் அளிக்கவும் நாஃபெட் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக வர்த்தக புள்ளிவிவரங்களின் அடிப்படையில், வெங்காயத்தின் சில்லரை விலைகள் கிலோ ரூ.80-100 என்ற அளவிலேயே இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க...
உயர் மதிப்பு காடுகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ள TNAU!
விவசாயிகளுக்கு விரைவில் கரும்பு நிலுவைத் தொகை -அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி!
Share your comments