1. செய்திகள்

விலையை கட்டுப்படுத்த இறக்குமதி விதிகளை தளர்த்தியது மத்திய அரசு

KJ Staff
KJ Staff
Fresh Red Onion

வெங்காயம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் சாமானியர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவசர நடவடிக்கையாக மத்திய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்தவும்,  இருப்பை அதிகரிக்கவும் வெங்காய இறக்குமதிக்கான தரக்கட்டுப்பாட்டிற்கான விதிகளை வரும் 30 ஆம் தேதி வரை தளர்த்தியுள்ளது.

 வெங்காயம் விளைவிக்கின்ற மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக கடுமையான மழை பொழிவு இருந்ததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய முழுவதும் விலை அதிகரித்து காணப்படுகிறது. விலையை கட்டுப்படுத்த உபரி கையிருப்புகளை அரசு விற்பனை செய்தது. வெங்காயம் ஏற்றுமதி மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை அரசு விதித்தும் விலையை கட்டுப்படுத்த இயலவில்லை.

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தற்போது மத்திய அரசு ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஈரான் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் விலையை கட்டுப்படுத்துவதுடன், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய இயலும் என்கிறது வேளாண் அமைச்சகம்.

Sacks of Onion

தனியார் விற்பனையாளர்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்வதன் மூலம் உள்நாட்டின் தேவை பூர்த்தியாகும்  என்பதை கருத்தில் கொண்டு, பூச்சி தொற்று தர நெறி முறைகளில் இருந்து நவம்பர், 30 வரை விலக்கு அளித்துள்ளது. எனவே இறக்குமதியாளர்கள் இந்தியாவிலேயே உள்ள அங்கீகரிக்கப்பட்ட பூச்சி தொற்று தடுப்பு  சோதனை செய்து, மேலும் சுகாதார அலுவலர்களால் முழுவதுமாக சோதனை செய்து பின்பு விற்பனைக்கு அனுமதிக்கபடும் என்று தெரிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டின் தர கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் செய்யப்படும் நான்கு முறை கூடுதல் கட்டணத்திலிருந்து அந்தந்த பொருளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்கள் மீது மெத்தில் புரோமைடு ரசாயனத்தால் தொற்று தடுக்கப்பட்டு, ஏற்றுமதி  செய்யப்பட்ட நாட்டின் தர சான்றிதழ் இருந்தால் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Onion prices continue to high: Government announced to relax fumigation norms Published on: 07 November 2019, 03:30 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.