1.மல்லிகைப்பூ (கிலோ) ரூ.437-க்கு ஏலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.437-க்கும், முல்லை ரூ.120-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.61-க்கும், கனகாம்பரம் ரூ.260-க்கும், சம்பங்கி ரூ.25-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், பட்டுப்பூ ரூ.98-க்கு ஏலம் போனது.
2.எகிரிய இஞ்சி விலை ரூ.220 வரை விற்பனை
கடந்த வாரம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ இஞ்சி தற்போது ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தான் தமிழ்நாட்டிற்கு அதிகளவு இஞ்சி வருகின்றன. தற்போது இஞ்சி நடவு காலம் என்பதால் வரத்து குறைந்துள்ளது. அதனால் விலை அதிகரித்துள்ளது. ஓரிரு மாதங்களுக்கு பின்னர் இஞ்சியின் விலை குறையும். மற்ற காய்கறிகளின் விலை எதுவும் உயரவில்லை. தக்காளியின் விலை குறைந்து தற்போது கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
3.பச்சை மிளகாய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல்
சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பச்சை மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பச்சை மிளகாய் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரிப்பு காரணமாக பச்சை மிளகாய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் பச்சை மிளகாய் சாகுபடி பணிகளில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு இருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளால் பச்சை மிளகாய் விளைச்சல் கடும் பாதிப்புக்குள்ளானது. இந்தநிலையில் தற்போது பச்சை மிளகாய் அதிக விளைச்சல் காரணமாக தற்போது கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இதனை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
4.முட்டை விலை 5 காசுகள் அதிகரிப்பு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 445 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக உயர்ந்து உள்ளது. இதேபோல் ஏற்றுமதி ரக முட்டையின் கொள்முதல் விலை 440 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
5.சின்ன வெங்காயம் விலை குறைந்தது
காங்கயம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது. ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மேலும் படிக்க
பால் உற்பத்தி விவசாயிகளுக்கு காப்பீட்டு பிரிமீயத்தில் 50 சதவீத மானியம்!
Share your comments