எளிதாக கடன் கொடுப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றும் சீன கடன் ஆப்களை கட்டுப்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் கடன் ஆப்ஸ் (Online Loan Apps)
கடந்த வெள்ளிக் கிழமை அன்று நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் கேள்வி பதில் நேரத்தின்போது, ஆன்லைனில் கடன் தருவதாக கூறி ஏமாற்றும் ஆப்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
அப்போது அவர், சீன கடன் ஆப்கள் மக்களை துன்புறுத்துவது குறித்து கடந்த 6 - 7 மாதங்களாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள், நிதியமைச்சக அதிகாரிகள், கார்ப்பரேட் விவகார அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.
தவறாக செயல்படும் பல்வேறு ஆப்கள் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆபத்தான ஆப்களை தடை செய்வதற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
Share your comments