கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், ஆன்லைன் காளான் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்குபெற விரும்புபவர்கள் வரும் 31ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளுமாறு பல்கலைக்கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைக் பல்கலைக்கழகத்தில் மாதந்தோறும் காளான் வளர்ப்பு குறித்த நேர்முகப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா ஊரங்கு காரணமாக இந்தப்பயிற்சி தற்காலிகாக நிறுத்தப்பட்டது.
சில மாத கால இடைவெளிக்கு பிறகு, வரும் செப்டம்பர் 5ம் தேதி இணையவழி சிப்பிக்காளான் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் 1 மணி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சிப்பிக்காளான் வளர்ப்புப் பயிற்சியில் பங்கேற்று பயனடைய விரும்புபவர்கள் www.tnau.ac.in என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பதிவு செய்து, பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்- 641 003,
என்ற முகவரியிலும்,
0422-6611336
என்ற தொலைபேசி எண்ணிலும்,
pathology@tnau.ac.in
என்ற மின்னஞ்சல் முகவரியிலும்
தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
அரசின் இலவச மாட்டுக்கொட்டகைத் திட்டம்! தெரியுமா உங்களுக்கு!
இன்டேன் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவை இனிமேல் வாட்ஸ்-அப்-பிலேயே செய்யலாம்-விபரம் உள்ளே!
Share your comments