1. செய்திகள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Veterinary Medicine courses apply online

Credit :Hindu tamil

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடைத்துறை மருத்துவ பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

கால்நடை படிப்புகள் 

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Veterinary and Animal Sciences University) கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய நகரங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு எனப்படும், பிவிஎஸ்சி (Bvsc) - ஏ.ஹெச் (AH courses) படிப்புகள் உள்ளன.மேலும், உணவு கோழியின மற்றும் பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் எனப்படும், பி.டெக்., படிப்புகள் உள்ளன.

ஆன்லைன் மூலம் இன்று முதல் பதிவிறக்கம் 

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. நடப்பு 2020 - 21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று காலை, 10:00 மணி முதல், www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளம் மூலம் செப்., 28 மாலை, 6:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல், வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். 'பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அக்., 23க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என்று தமிழ்நாடு கால்நடைத்துறை மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க.. 

ஊரடங்கால் வேலையிழந்தோருக்கு ESIC மூலம் 50% சம்பளம் - 3 மாதங்கள் வழங்க மத்திய அரசு முடிவு!!

ஆன்லைன் காளான் வளர்ப்பு பயிற்சி- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஏற்பாடு!

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை!!

 

English Summary: You can apply online for Tamil Nadu Veterinary Medicine courses from today

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.