மத்திய அரசு சார்பாக பெண் தொழில்முனைவோருக்கு உதவித்தொகை அளிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு, பெண்களுக்கும் பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இவர்கள் தொழில் தொடங்க பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தொழில் பயிற்சி (Training)
மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு சார்பாக பயிற்சி நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் திறன் கொண்ட பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதிக அளவில் இளைஞர்கள் இருந்தாலும் திறன் கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இதை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக இளைஞர்களை பயிற்சி அளிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பெண்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்கள் சம்பாதிக்கும் விதமாக, முக்கியமாக திருமணம் ஆன பெண்களும் வருமானம் ஈட்டும் விதமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்கள் சுய தொழில், சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இதில்தான் உதவித்தொகையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
உதவித்தொகை (Scholarship)
குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை இருந்தால் பெண்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படும். இவர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இவர்கள் மத்திய அரசின் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அந்த பயிற்சியின் மூலமாக தொழில் தொடங்கும் பட்சத்தில் இந்த உதவித்தொகை அளிக்கப்படும். பெண்கள் சுயமாக வேலைகளை செய்வதற்காக இந்த உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க
மினிமம் பேலன்ஸ்: எந்த வங்கியில் எவ்வளவு தொகை பராமரிக்க வேண்டும்?
பெண் குழந்தைகளுக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை: பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுப்பு!
Share your comments