மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு ரயில் பயணம் மேற்கொள்ள, கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொலைகாரக் கொரோனா (The killer corona)
இந்தியாவில் தீவிரமாகப் பரவியக் கொரோனா வைரஸின் 2-வது அலை கொஞ்சம்கூட ஈவு- இரக்கமின்றி, கண்ணில் பட்டவர்களையெல்லாம் காவு வாங்கிச் சென்றது.
ஊரடங்கு (Curfew)
இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களிலும், இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு என பல்வேறுக் கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்பட்டுத் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
பரவல் குறைந்தது (The spread is minimal)
இதன் காரணமாக தற்போது, கொரோனாத் தொற்றுப் பரவல் குறைந்து வருவதால், பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகின்றன.
தளர்வுகள் (Relaxations)
பாதிப்புக் குறைந்த மாவட்டங்களில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்திற்கு, கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு மாநில அரசுகள் அனுமதி வழங்கி வருகின்றன.
இந்நிலையில் தென்மேற்கு ரயில்வே தெரிவித்து உள்ளதாவது:
தடுப்பூசி முதல் தவணை (The first installment of the vaccine)
மஹாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவிற்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், கட்டாயம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை (RT-PCR Test)
தடுப்பூசி செலுத்தாதவர்கள் 72 மணி நேரத்திற்கு மிகாமல், ஆர்.டி.-பி.சி.ஆர்., பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!!
தலைநகர் டெல்லியில் அதிர்ச்சி! 5 கொரோனா நோயாளிகளுக்கு ஏற்பட்ட புதிய அறிகுறி!!
Share your comments