வேளாண்மை-உழவர நலத்துறையின் சார்பில் ரூ.210.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்.29 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு செலவில் எத்தகைய கட்டிடங்கள் திறப்பு போன்றவற்றின் முழு விவரங்கள் பின்வருமாறு-
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறைக்காக தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டம்- மேல்சித்தாமூரில் 2 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை திறந்து வைத்தார்.
பதப்படுத்தும் மையங்கள்:
விழுப்புரம் மாவட்டம்- ஒலக்கூர் மற்றும் மாத்தூர், சேலம் மாவட்டம்- எடப்பாடி, உத்தம சோழபுரம், வாழப்பாடி, தலைவாசல் மற்றும் கொளத்தூர், ஈரோடு மாவட்டம்- அந்தியூர், கடலூர் மாவட்டம்- பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடியில் 43 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் மையங்கள்:
குளிர்பதனங் கிடங்குகள்:
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் 5000 மெ.டன், செங்குன்றத்தில் 2000 மெ.டன், சேலத்தில் 1000 மெ.டன், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் 5000 மெ.டன், தூத்துக்குடியில் 2000 மெ.டன் மற்றும் தருமபுரி மாவட்டம் கரகதஹள்ளியில் 5000 மெ.டன், என மொத்தம் 20,000 மெ.டன் கொள்ளளவில் 87 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குளிர்பதனக் கிடங்குகள்;
சேமிப்புக்கிடங்கு:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டம், பாண்டி கிராமத்தில் 1 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக்கிடங்கு;
துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்:
திருவண்ணாமலை மாவட்டம் கீளூர் மற்றும் கொழப்பலூர், மயிலாடுதுறை மாவட்டம் மாணிக்கபங்கு ஆகிய இடங்களில் 2 கோடி யே 82 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள்;
விவசாயிகள் ஆலோசனை மையம்:
சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம், வேலூர், தென்காசி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் 4 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் விவசாயிகள் ஆலோசனை மையங்கள்
மதிப்பு கூட்டு மையம்:
தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டையில் 5 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உலர்ந்த தேங்காய்தூள், குழந்தை பராமரிப்பு எண்ணெய், அழகு சாதன எண்ணெய் மற்றும் ஆரோக்கியத்திற்கான எண்ணெய் தயாரித்தலுக்கான மதிப்பு கூட்டுமையம்;
Read more: மார்ச் 1 முதல் கேஸ் விலை உயர்வு- மாநிலம் வாரியாக விலை எவ்வளவு?
புதிய உழவர் சந்தைக் கட்டடம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கடலூர் மாவட்டம்- பண்ருட்டி ஆகிய இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் தலா 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக்கிடங்குகள்: தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய உழவர் சந்தைக் கட்டடம்;
வாழை ஏலம் மற்றும் மதிப்புக்கூட்டு மையம்:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள தென்னை வணிக வளாகத்தில் 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள்; திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் 6 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வாழை ஏலம் மற்றும் மதிப்புக்கூட்டு மையம்;
துணை வேளாண் விரிவாக்க மையங்கள்:
வேளாண்மை துறைக்காக வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் இராணிப்பேட்டை மாவட்டம்- தக்கோலம், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி, தருமபுரி மாவட்டம்- பாப்பாரப்பட்டி, கம்பைநல்லூர், அரியலூர் மாவட்டம் அசவீரன்குடிக்காடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஆகிய இடங்களில் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை வேளாண் விரிவாக்க மையங்கள்;
ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் பள்ளிப்பட்டு, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி, சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி, ஈரோடு மாவட்டம்- கோபிச்செட்டிப்பாளையம், இராமநாதபுரம் மாவட்டம் - சத்திரக்குடி மற்றும் நயினார்கோயில், விழுப்புரம் மாவட்டம் முகையூர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் மற்றும் கீழையூர், அரியலூர் மாவட்டம் செந்துறை, திருவண்ணாமலை மாவட்டம்- கீழ்பென்னாத்தூர், அனக்காவூர் மற்றும் பெரணமல்லூர், நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம், தஞ்சாவூர் மாவட்டம்- திருவையாறு ஆகிய இடங்களில் 38 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் வேளாண் பொறியியல் துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியத்தால் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள்;
திசுவளர்ப்பு ஆய்வகம்: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் செயல்விளக்க பூங்காவில் 1 கோடியே 74 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திசுவளர்ப்பு ஆய்வகம் மற்றும் தங்கும் விடுதி; என மொத்தம் 210 கோடியே 75 இலட்சம் செலவில், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Read more:
எதிர்ப்பாராத விபத்தால் மங்கிய வாழ்வை மீட்ட பெண் விவசாயி சங்கீதா பிங்கலேயின் வெற்றிக் கதை!
பாசிப்பயறு மற்றும் நிலக்கடலையில் புதிய இரகம் வெளியீடு- கைக்கொடுக்குமா விவசாயிகளுக்கு?
Share your comments