கந்துவட்டி கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழகம் முழுவதும் ‛ஆபரேஷன் கந்துவட்டி' என்ற பெயரில் தீவிர நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.,க்கள், போலீஸ் கமிஷனர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கந்து வட்டிக் கொடுமையால், பல பேர் தற்கொலை செய்து கொள்வதால், இதனைத் தடுக்க தமிழக காவல் துறை புதிய திட்டத்தை, தற்போது செயல்படுத்த ஆயத்தமாகியுள்ளது.
கந்துவட்டி கொடுமை (Kandhuvatti Atrocity)
கடலூரைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். குடும்ப செலவுக்காக ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தி விட்டதாகவும், ஆனால் அந்த பெண் மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த போலீஸ்காரர் செல்வகுமார் கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அப்பெண் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆபரேஷன் கந்துவட்டி (Operation Kandhuvatti)
இந்த நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கந்துவட்டி பிரச்னைகள் தொடர்பாக போலீஸ் கமிஷனர்கள், எஸ்.ஐ.,க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கந்துவட்டி தொடர்பான வழக்குகளை கையாள ‛ஆபரேஷன் கந்துவட்டி' என்ற சிறப்பு இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள கந்துவட்டி வழக்குகளை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கையெழுத்து வாங்கப்பட்ட வெற்று காகிதங்கள், சட்டவிரோத ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க
உர விற்பனை நிறுவனத்தின் காசோலை மோசடி: தோனி மீதும் வழக்குப் பதிவு!
நெடுஞ்சாலைத் துறையினர் கிணற்றை மூட வந்ததால், விவசாயி தற்கொலை முயற்சி
Share your comments