ரூ.8,000 உதவித் தொகை உடன் தொழிற் பழகுநர் ஆக வாய்ப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Opportunity to become a professional with a grant of Rs.8,000! Who can apply?

மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென்மண்டல திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐடிஐ படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela 2022) வருகிற 14 நவம்பர் 2022 அன்று காலை 9 மணியளவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை-32 வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க, ஐடிஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8,10,12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் தொழிற் பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர். தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்த பட்சம் ரூ.8000/- மற்றும் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதம் (National Apprentship Certificate) வழங்கப்படும்.

இதுவரை தொழிற் பழகுநர் பயிற்சி (NAC) முடிக்காத அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeship.gov.in இணையதள முகவரியில் பதிவு செய்து, அசல் கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்செய்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை மாவட்டத்தால் வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க:

PM Kisan திட்டம் பயன்பெற e-kyc புதுப்பிக்க காலக்கெடு!

விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியம்!!

English Summary: Opportunity to become a professional with a grant of Rs.8,000! Who can apply? Published on: 09 November 2022, 02:23 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.