வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலேர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலேர்ட் என்பது மிக கனமழைக்கான எச்சரிக்கை ஆகும்.
தாழ்வு பகுதி
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையும். ஆனால் அது புயலாக மாற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை
இன்று இந்த 14 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments