1. செய்திகள்

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்- ஒரே நாளில் ரூ.57 லட்சத்துக்கு மேல் வர்த்தகம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Tirumangalam Disciplinary Trading Hall

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதி, விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று (26.02.2024) கீழ்க்கண்ட விளைபொருட்கள் இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டுள்ளதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் ரூ.57,16,525/- க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

கள்ளிக்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் குன்னத்தூர், தொட்டியபட்டி, குராயூர் ஆகியோரின் 53,977 கிலோ இருங்குச்சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு குறைந்தபட்ச விலையாக ரூ.40-க்கும் அதிகபட்ச விலையாக ரூ 40.10-க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ.21,60,775-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

விருதுநகர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் காலப்பன்பட்டி, நடையனேரி, பொட்டிபுரம் ஆகியோரின் 99,170 கிலோ மக்காச்சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.23.50 க்கும் அதிகபட்ச விலையாக ரூ.24.30 க்கும் விலை போனது. இதன்மூலம் ரூ.23,85,258/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

மாப்பிள்ளை சம்பா நெல் ரகம் ஏலம்:

உவரி,வில்லூர் அழகாபுரி, விளாச்சேரி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் 5250 கிலோ பாரம்பரிய ரகமான மாப்பிள்ளைசம்பா நெல் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.39 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.2,41,110/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.    

வாடிப்பட்டி, சிவகங்கை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 2509 கிலோ பாரம்பரிய ரகமான கருப்புகவுனி நெல் ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றுக்கு ரூ.67 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 1,68,103/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. திருவண்ணாமலை சேர்ந்த ஒரு விவசாயியின் 1010 கிலோ பாரம்பரிய ரகமான அறுபதாம் குருவை நெல் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.36 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.36,360/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

உளுந்து/துவரை ஏலம் விவரம்:

விருதுநகர் மாவட்டம் குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 2190 கிலோ உளுந்து ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 73.50  க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.1,60,965/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Read more: நெல் மற்றும் சோளம் பயிரில் TNAU வெளியிட்ட புதிய இரகங்களின் சிறப்பம்சம் என்ன?

S.P.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 5236 கிலோ துவரை   ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றிற்கு குறைந்தபட்ச விலையாக ரூ 85.64 க்கும் அதிகபட்ச விலையாக ரூ.87 க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ.4,54,914/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. குளத்துவாய்ப்பட்டி, செங்கப்படை, பொட்டல்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் 526.6 கிலோ நாட்டு கொத்தமல்லி ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.90 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.47,394/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் நல்லிய தேவன்பட்டி,உலகாணி ஆகியோரின் 322.400 கிலோ பாசிப்பயறு ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றுக்கு ரூ.85 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.27,404/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. வேலூரைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 372 கிலோ ரத்தசாலி அரிசி ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.70 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.26,040/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

வரகு அரிசி/குதிரை வாலி ஏலம் விவரம்:

திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 50 கிலோ வரகு அரிசி ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.85 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.4,100/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. திருமங்கலம் உழவர் உற்பத்தியார் நிறுவனத்தின் 94.400 கிலோ குதிரைவாலி ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.43-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.4,102/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆக மொத்தம் நேற்று ஒரே நாளில் ரூ 57,16,525/- க்கு வர்த்தகம் நடைபெற்றது.

மேலும்  விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075 என்ற எண்ணிலும், மேற்பார்வையாளரை 9600802823 என்ற எண்ணிலும், சந்தை பகுப்பாளரை 8754379755 என்ற எண்ணிலும் ஆகிய தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more:

விவசாயிகளை கௌரவிக்கும் MFOI சம்ரித் கிசான் உத்சவ் நிகழ்வை 3 மாநிலங்களில் நடத்த ஏற்பாடு!

மீன் வளர்ப்புக்கு 60 சதவீத மானியம்- போலி கால்நடை மருத்துவர்களுக்கு செக்மேட்

English Summary: Over Rs 57 Lakhs trade in a single day at Tirumangalam Disciplinary Trading Hall Published on: 27 February 2024, 07:04 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.