தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் (Oxygen) தயாரித்து வழங்க அனுமதி கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. நேற்று காலை அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதிக்கலாம் என தீர்மானம் நிலைவேற்றப்பட்டது.
தமிழக அரசு வாதம்:
ஆக்சிஜன் உற்பத்தியில் வேதாந்தா பணியாளார்களை ஈடுபடுத்த அனுமதிக்க கூடாது என தமிழக அரசு வாதம் செய்தது. வேதாந்தா நிறுவனத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவு ஏற்பட்டுள்ளது எனவும் கூறியது. ஆக்சிஜன் உற்பத்தி பணியை மேற்கொள்ளும் திறன் தமிழக அரசுக்கு உள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக 250 பணியாளர்களை ஈடுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆலையை தொடர்ச்சியாக இயக்க வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கிறது என கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையை கருதி ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் ஆலையை திறக்க முடிவு செய்துள்ளோம் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தயாரிப்புக்காக 4 மாதத்துக்கு மட்டும் ஆலையை திறக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது. வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டுமே ஆலையை பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு கூறியது.
உச்சநீதிமன்றம் பதில்:
ஆலை நிர்வாகம் மற்றும் இயக்கம் அரசின் கண்காணிப்பில் இருக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. ஆலையில் தயாரிக்கும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அளிப்பதை தடுக்கக்கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மத்திய அரசு வாதம்:
ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு வாதம் செய்து வருகிறது. உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய அரசு மட்டும் தான் பிரித்து கொடுக்க முடியும் என கூறியுள்ளது. வேதாந்தா நிறுவனம், தமிழக அரசுக்கு இடையே உள்ள விவகாரம் குறித்து பிரச்சனையில்லை என மத்திய அரசு கூறியது.
வேதாந்தா நிறுவனம் கோரிக்கை:
ஆக்சிஜன் மட்டுமே தயாரிப்போம், அதற்காக மாநில அரசு மின்சாரம் (Electricity) வழங்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. ஆட்சியர் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால், பிரதிநிதிகள் மீது நம்பிக்கை இல்லை என கூறியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் அலகை மற்றுமே இயக்குவோம் என கூறியுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்கும் குழுவில் ஆலை எதிர்ப்பாளர்கள் இடம்பெறகூடாது என தெரிவித்துள்ளது. கண்காணிப்பு குழுவில் அரசு அதிகாரிகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என நிறுவனம் தரப்பு வாதம் செய்துள்ளது.
மேலும் படிக்க
கொரோனா தடுப்பு நடவடிக்கை! நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!
முழு ஊரடங்கால், வெறிச்சோடிய தமிழகம்! கொரோனா தடுப்பு நடவடிக்கை!
Share your comments