தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள கம்பத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 60க்கு கொள்முதல் செய்கிறது. கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடி (Paddy Cultivation) செய்யப்பட்டுள்ளது. கூடலூரில் துவங்கி பழனிசெட்டிபட்டி வரை நெல் சாகுபடி பரப்பாகும். கம்பம் பகுதியில் நடவு செய்வதில் முந்துவதால், அறுவடையும் முன் கூட்டியே துவங்கும்.
நெல் கொள்முதல் (Paddy Purchase)
சுருளிப்பட்டி ரோடு, சின்ன வாய்க்கால் பகுதிகளில் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரினர். அதை ஏற்று கம்பம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் துவங்கியுள்ளது. குவிண்டால் ரூ.2060க்கு அரசு கொள்முதல் செய்கிறது.
விவசாயிகள் ஆர்வத்துடன் கொள்முதல் நிலையம் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு நிர்ணயம் செய்த விலையே, இந்தாண்டும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடம் இருந்து அரசாங்கமே நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நேரடி நெல் கொள்முதலுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள விலை வெளிச்சந்தை விலையைவிட ஆதாயமாக இருப்பதால் விவசாயிகள் இங்கே விற்க விரும்புகிறார்கள். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்(டி.என்.சி.எஸ்.சி) தனது நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இந்த கொள்முதலை மேற்கொள்கிறது.
மேலும் படிக்க
நெற்பயிாில் கதிர்நாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
Share your comments