நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் குறுவை சாகுபடிக்கான நெல் விதைகள் விற்பனைக்குத் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் விதைகள் விற்பனை
இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் ராமசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு கோ 51, ஆடுதுறை 53, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஏ.எஸ்.டி. 16, டி.பி.எஸ். 5 போன்ற நெல் ரகங்கள் ஏற்றதாக உள்ளன. இதில், கோ 51 மற்றும் ஆடுதுறை 53 ஆகிய ரகங்கள் தற்போது விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், சன்ன ரகமான கோ 51 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரகமாகும். இதன் வயது 105 முதல் 110 நாள்கள். இது சன்ன ரகமாக இருப்பதால் அதிக விலைக்கு விற்க ஏதுவாக அமைகிறது. மேலும், தழைச்சத்தை பிரித்து இடும்போது சாயாமல் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறையிலிருந்து 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரகம் ஆடுதுறை 53. இது 100 முதல் 110 நாள்கள் வயதுடையது. இந்த ரகத்தில் பூச்சி நோய் தாக்குதல் குறைவாக இருக்கும்.
கோ 51 மற்றும் ஆடுதுறை 53 ரக விதைகள் கிலோ ரூ. 33-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடா்பு கொண்டு விதைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்
மேலும் படிக்க....
தடுப்பூசியும் செயல் இழக்கலாம்! எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!
கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!
அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்
Share your comments