இந்தியாவில் குடியுரிமை ஆவணங்களில் ஒன்றாக விளங்கும் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வேலையை முடிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
பான் – ஆதார் (Pan - Aadhar)
இந்தியாவில் மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அட்டை ஒவ்வொரு குடிமக்களுக்கும் அடையாள ஆவணமாக விளங்கி வருகிறது. தற்போது வங்கி கணக்கு தொடங்க, பான் கார்டு பெற மற்றும் தனிப்பட்ட சில வேலைகளுக்கும் ஆதார் எண் அவசியமாகிறது. இந்த ஆதார் எண்ணை மற்ற முக்கிய ஆவண எண்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்தகைய ஆவணங்களில் ஒன்று பான் கார்டு. தற்போது பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கி சார்ந்த அனைத்து வேலைகளுக்கும் பான் கார்டு தேவைப்படுகிறது. அதனால் பான்கார்டை ஆதார் என்னுடன் இணைக்க வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டு அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வந்தது. இறுதியாக 2023 மார்ச் 1ம் தேதிக்குள் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று அறிவித்தது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 2023 மார்ச் மாதத்திற்கு பிறகு உங்களது பான் கார்டு செயலிழந்து போய் விடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அதன் பிறகு நீங்கள் பான் கார்டை வைத்து எந்தவித வேலைகளையும் செய்ய முடியாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதனால் www.incometax.in என்ற இணையதளம் வாயிலாக உடனே பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: சம்பளத்தை உயர்த்தும் அரசு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பரான திட்டம்: விண்ணப்பிக்க மார்ச் 2023 தான் கடைசி!
Share your comments