பான் அட்டை (PAN card) ஆதார் அட்டையுடன் (Aadhaar Crad) இணைப்பதற்கான காலக்கெடு வருகிற ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு பான் கார்ட் செயல்படாது, மேலும் வருமான வரிச் சட்டத்தின் படி, ஒரு பெரிய தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.
PAN - Aadhaar Link
பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க மார்ச் 31ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இதற்கான காலக்கெடுவை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இம்மாத இறுதியுடன் காலக்கெடு முடிவதால், ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத லட்சக்கணக்கான பான் கார்டுகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வருமான வரி சட்டம்
தற்போதைய வருமான வரிச் சட்டங்களின் படி (Income Tax Act), ஆதார் அட்டையுடன் பான் அட்டை இணைக்கப்படாவிட்டால், பான் அட்டை "செயல்படாதது" என்று அறிவிக்கப்படும் என வருமான வரித் துறை முன்பு அறிவித்திருந்தது.
இப்போது, அதன் சமீபத்திய அறிவிப்பில், அத்தகைய பான் அட்டைதாரர்கள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி,
- பான் அட்டை வைத்திருப்பவர்கள் ஜூலை 1 முதல் பான் கார்டை பயன்படுத்த முடியாது.
- பான் கார்டு விவரங்களை வழங்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின்படி ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும்.
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது எப்படி?
ஆதாருடன் பான் கார்டை இணைக்க வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் 'Link Aadhaar' பிரிவில் ஆதார் எண், பான் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்கி எளிதாக இணைத்துவிடலாம்.
ஏற்கெனவே உங்கள் ஆதாருடன் பான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ‘Aadhaar Status' பிரிவில் தெரிந்துகொள்ளலாம்.
எஸ்எம்எஸ் (SMS)மூலமாகவும் ஆதாருடன் பான் கார்டை இணைக்க முடியும். 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு <SPACE><12 digit Aadhaar><SPACE><10 digit PAN> என்ற முறையில் எஸ்எம்எஸ் அனுப்பி ஆதாருடன் பான் கார்டை இணைத்துவிடலாம். இந்த இணைப்புக்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Lockdown : வீட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!
கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!
PM-KMY: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 36,000 கிடைக்கும்...இந்த திட்டம் தெரியுமா உங்களுக்கு!
Share your comments