Parcel service by Indian Railways
இந்திய தபால் மற்றும் இந்திய ரயில்வே துறை இணைந்து கூட்டு பார்சல் விநியோக முறையைத் தொடங்கியுள்ளன. அதன்படி, 35 கிலோவுக்கு மேற்பட்ட எடையிலான பார்சலை வாடிக்கையாளரின் இருப்பிடத்திலிருந்து பெற்றுக்கொண்டு ரயில் நிலையத்திற்கு அனுப்ப உள்ளது. பின்னர், பார்சல் சென்று சேர்ந்த ரயில் நிலையத்திலிருந்து, அதனைப் பெறும் வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்கே கொண்டு விநியோகம் செய்யும் பணியை இந்திய தபால் துறை மேற்கொள்ள உள்ளது.
பார்சல் சேவை (Parcel Service)
கூட்டு பார்சல் விநியோக சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கட்டணத்தில் 3ஆம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பார்சலைப் பெற்றுக் கொண்டது முதல் அதை டெலிவரி செய்யும் வரை வாடிக்கையாளருக்கான தொடர்பு அலுவலகமாக இந்திய தபால் அலுவலகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை நகர பிராந்தியத்தில் இத்திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டையிலிருந்து திருமானூருக்கு 2022 டிசம்பர் 7ஆம் தேதி பார்சல் அனுப்பப்பட்டது. ராணிப்பேட்டையில் பெறப்பட்ட அந்த பார்சல் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சி ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் அந்த பார்சல் டிசம்பர் 8ஆம் தேதியன்று வாடிக்கையாளரின் இருப்பிடத்தில் டெலிவரி செய்யப்பட்டது.
இச்சேவையை பெற விரும்புவோர் உதவி இயக்குநர், (வர்த்தக மேம்பாடு) சென்னை நகர பிராந்தியத்தில் உள்ள உதவி இயக்குநரை அணுகலாம். அல்லது 044 -2859 4761 /044 -2859 4762 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் [email protected] என்ற இணைய தளத்தைக் காணலாம். இத்தகவலை சென்னை நகர தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
தமிழக விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானியம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
கூடுதல் வருமானம் சம்பாதிக்க அருமையான அஞ்சலகத் திட்டம் இதுதான்!
Share your comments