விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி வேலை நேரம் அல்லாத தருணங்களில்,ஏ.டி.எம்., மெஷின் மூலமாக, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் ரொக்க பணத்தை செலுத்துவதற்கு, இனி கட்டணம் வசூலிக்கப்படும் என ICICI வங்கி அறிவித்துள்ளது.
இவ்வாறு கட்டணம் வசூலிக்கும் பணியை பல தனியார் வங்கிகள் துவங்கி இருக்கின்றன. ஏற்கனவே, ஆக்சிஸ் வங்கி ஆகஸ்ட் மாத த் துவக்கத்திலிருந்து ரொக்கம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க துவங்கி விட்டது.
ICICI அறிவிப்பு
இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதத்திலிருந்து, வாடிக்கையாளர்களிடமிருந்து இத்தகைய கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக ICICI வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி வங்கி விடுமுறை நாட்களிலும், மாலை, 6 மணி முதல் காலை, 8 வரையிலான நேரத்திலும் பணம் செலுத்தும் ஏ.டி.எம்., மிஷின் மூலம் ரொக்கம் செலுத்துவதற்கு, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
நவம்பரில் அமல்
வரும் முதல் தேதியிலிருந்து இந்த நடைமுறை நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்தில் ஒரு முறையியோ அல்லது, பல முறையாகவோ, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மெஷின் மூலம் பணம் செலுத்தும் பட்சத்திலும், கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தனியார் வங்கிகளின் இத்தகைய முடிவுகளால் கடைக்காரர்கள், சிறு வணிகர்கள் ஆகியோர் தாங்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தக் கட்டணம் அடிப்படை சேமிப்புக் கணக்கு, ஜன் தன் கணக்கு, மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
இயற்கை வேளாண்மைக்கு தரச்சான்று பெற விதைச்சான்று, அங்க சான்று பெற அழைப்பு!
தீபாவளி Special offerல் வட்டி விகிதம் அதிரடிக் குறைப்பு- வீடு,காரு வாங்க அடிக்கிறது யோகம்!
Share your comments