தேசிய பென்சன் திட்டத்தில் (NPS) முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA மாற்றியுள்ளது. இதன்படி, பென்சன் கணக்கில் கிரெடிட் கார்டு வாயிலான பங்களிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் அரசு ஊழியர்களுக்காக தேசிய பென்சன் திட்டம் 2004ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் இதில் பயனாளிகளாக இருந்து வந்தனர்.
தேசிய பென்சன் திட்டம் (National Pension Scheme)
பிற்காலத்தில் தேசிய பென்சன் திட்டத்தில் தனியார் துறை ஊழியர்களும் முதலீடு செய்ய அரசு அனுமதி அளித்தது. தற்போதைய சூழலில் தனியார் ஊழியர்கள் மத்தியில் தேசிய பென்சன் திட்டம் மிக அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தேசிய பென்சன் திட்டத்தில் முதல் நிலை கணக்கு (Tier-I Account), இரண்டாம் நிலை கணக்கு (Tier-II Account) என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன.
இந்நிலையில், தேசிய பென்சன் திட்டத்தின் பயனாளிகள் இரண்டாம் நிலை கணக்குகளுக்கு கிரெடிட் கார்டு வாயிலாக பணம் செலுத்துவதற்கு PFRDA தடை விதித்துள்ளது.
இதனால், பென்சன் பயனாளிகள் கிரெடிட் கார்டு பங்களிப்பை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது அவசியமாகும். மீறினால், உங்கள் பென்சன் தொகைக்கு ஆபத்து நேரலாம்.
மேலும் படிக்க
பாலிசிதாரர்களுக்கு குட் நியூஸ்: இன்சூரன்ஸ் விதிமுறைகளில் மாற்றம்!
Share your comments