சென்னை உள்பட 9 மாவட்டங்களில் செயல்பட்ட போலி வங்கி தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசினார் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.
போலி வங்கி:
இதுகுறித்து பேசிய அவர், ‘ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் 9 இடங்களில் போலி வங்கி நடத்தி மோசடி செய்துள்ளனர். நிஜ வங்கி போலவே டெபாசிட் செல்லான், சீல் என செட்டப் உடன் இயங்கியுள்ளது. சுமார் 2000 பேர் வாடிக்கையாளர்களாக இந்த வங்கியில் உள்ளனர். 9 இடங்களில் போலி வங்கி நடத்தி மோசடி செய்தவர்களின் ரூ.56 லட்சம் முடக்கப்பட்டடுள்ளது.
காவல் ஆணையர் சங்கர் ஜிவால்:
போலி வங்கி நடத்தியவர்களிடம் இருந்து போலி பாஸ்புக், முத்திரைகள், கிரெடிட் கார்ட், பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, கள்ளக்குறிச்சி, சேலம், விருத்தாச்சலம், நாமக்கல், மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் போலி வங்கி கிளைகள் நடத்தப்பட்டுள்ளன. போலி வங்கி நடத்தி 2,000 வாடிக்கையாளர்களை சேர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கவனம்:
சென்னையை சேர்ந்த சந்திரபோஸ் உள்ளிட்ட மோசடி கும்பலை கைது செய்து, ரூ.56 லட்சம் முடக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் போலியான வங்கியை நடத்தி வந்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் என காவல் ஆணையர் விளக்கமளித்தார். ஒரு வருட காலமாக ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் போலியான வங்கியை நடத்தி வந்துள்ளனர்.மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் படிக்க:
Share your comments