குஜராத் விவாசகிகளிடம் 4 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளது பெப்சி நிறுவனம். 'லேஸ் சிப்ஸ்' தயாரிக்கும் உருளை கிழங்குகளை பயிரிட்டு விற்பனை செய்ததினால் வழக்கு தொடுத்துள்ளது.
இன்று விசாரணைக்கு வந்த வழக்கானாது இருதரப்பு வாதங்களை கேட்டது. பெப்சி நிறுவன வழக்கறிஞர் கூறுகையில், அவர்கள் விற்பனை செய்த உருளை கிழங்கு காப்புரிமை செய்யப்பட்டதாகும். எனவே அவர்கள் விளைவித்த கிழங்குகளை நிறுவனத்திடமே திரும்பி தர வேண்டும். மேலும் நிறுவனத்திடம் விதைகளை வாங்கி விளைவித்து நிறுவனத்திற்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் வழக்கு வாபஸ் பெற படும். மீண்டும் சேர்த்து பணி செய்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளன, என்றார்.
விவசாகிகள் உரிமை, மற்றும் பயிர் பாதுகாப்பு போன்ற சட்டத்தின் கீழ் உள்ள 64 என்ற பிரிவினை பயன்படுத்தி உரிமை கோருகிறது பெப்சி தரப்பு. விவாசகிகள் இதே சட்டத்தில் 39 பிரிவினை பயன்படுத்தி, விதைகளை சேமித்து, பயன்படுத்தி மறு பயிர்கள் செய்து கொள்ளலாம் என கூறுகிறது. அதாவது காப்புரிமை பெற்ற விதைகளை விதைக்காமல் மற்ற விதைகளை பயிர் செய்து கொள்ளலாம் என்கிறது.
இது போன்ற வழக்கு நிதிமன்றத்திற்கு வருவது முதல் முறையாகும். எனவே இதற்கான அடுத்த கட்ட விசாரணை வரும் ஜூன் 21 ஆம் தேதி வருகிறது.
Share your comments