1. செய்திகள்

தமிழகம் உட்பட 24 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் கொள்முதல் நிறுத்தம்...

Deiva Bindhiya
Deiva Bindhiya
Petrol diesel procurement halted in 24 districts, due to reduction in excise duty ...

மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது, இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தியும், இன்று ஒருநாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுவதாக டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். விரிவான செய்தியை கீழே படிக்கவும்.

மேலும் கடந்த 2017 ஆண்டில் இருந்து, இதுவரை கமிஷன் தொகை உயர்த்தப்படவில்லை எனவும், அதை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் அந்த சங்கம் கோரியுள்ளது.

இன்றைய போராட்டத்தில் தமிழகம் கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்பட 24 மாநிலங்களில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தில் இன்று பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று வெளியான தகவலை அம்மாநில பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் மறுத்திருப்பது குறிப்பிடதக்கது.

எண்ணெய் கிடங்குகளில் இருந்து எரிபொருள் கொள்முதல் ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாகவும், ஆனால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க: புழக்கத்தில் கள்ளநோட்டுகள்- கண்டுபிடிப்பது எப்படி?

PM Kisan: ரூ. 2000 இன்று உங்கள் கையில்: மத்திய அரசு அறிவிப்பு!

கடந்த வாரம் இறுதியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் விலையின் கலால் வரி குறைப்பதாக அறிவித்தார். அதில், பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு ரூ.8 குறைப்பதாகவும், டீசல் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.6 குறைப்பதாகவும் சனிக்கிழமை அறிவிப்பு வெளியாகியது. இதைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், வாகன எரிபொருட்கள் மீதான கலால் வரியை அரசு குறைத்ததைத் தொடர்ந்து, பணவீக்கமும் அதிகபட்சமாக உயர்ந்திருப்பது, சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

மேலும் படிக்க:

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண்கள்!

ஜூன் 23 பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு!

English Summary: Petrol diesel procurement halted in 24 districts, due to reduction in excise duty ... Published on: 31 May 2022, 10:48 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.