நாடு முழுவதும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதுவரை 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது. 1 லிட்டர் டீசல் விலை ரூ.98-ஐ தாண்டியது. தமிழகத்திலும் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து இதுவரை 12 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.88-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.89-க்கும் விற்கப் படுகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங் களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.
கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணா மலை, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம், திண்டுக்கல், மயிலாடுதுறை, சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது.
வேலூர் மாவட்டத்தில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.60 எனவும் பிரிமியம் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.104.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் டீசல் 94.03 -க்கு விற்பனையானது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.84-க்கு விற்பனையானது. டீசல் ரூ.94.78 ஆக இருந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.40, டீசல் ரூ.94.01 ஆக இருந்தது.
தருமபுரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.39-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் இன்று ரூ.100.38-க்கு விற்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.100-ஐ கடந்த பெட்ரோல் விலை ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு விலையில் விற்கப்படுகிறது. பழநியில் பெட்ரோல் விலை ரூ.100.11-க்கும், கொடைக்கானலில் ரூ.100.49-க்கும் விற்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ.100.91, டீசல் விலை ரூ.94.84 ஆக இன்று விற்றது. விழுப்புரத்தில் பெட்ரோல் விலை ரூ.100.26, டீசல் விலை ரூ.94.22 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் நகர் பகுதியில் பெட்ரோல் விலை ரூ.100.76, டீசல் விலை ரூ.94.70 ஆக விற்பனையானது.
நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.100.91-க்கும், டீசல் ரூ.94.62-க்கும் விற்கப் படுகிறது. சேலம் மாவட்டத் தில் பெட்ரோல் விலை ரூ.99.68 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் சில பெட்ரோல் பங்குகளில் ரூ.100-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தான் பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக விற்கப்படுகிறது. பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கும் நிலையில் உள்ளது.
பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும் படிக்க
நுண்ணுயிர் உர உற்பத்தி மையங்கள் அமைக்க 7 கிராமங்கள் தேர்வு!
கருப்பு பூஞ்சை நோயை சமாளிக்க தமிழகத்தில் மருத்துவ குழு தயார்!
ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!
Share your comments