தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த திட்டம் இன்றுத் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இருப்பினும் குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பானத் தகவலை நிதியமைச்சர் வெளியிட்டார்.
அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
இதுதொடர்பாக, பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறி இருப்பதாவது:-
மகளிரின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அவர்களின் நலனுக்காக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான ஆவின் பால் விலை குறைப்பு, சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் போன்ற பல வாக்குறுதிகளை முதலமைச்சர் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளார்.
அடுத்த முக்கிய வாக்குறுதியான மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்ற ஆட்சியினர் விட்டுச்சென்ற நிதி நெருக்கடி சூழல் காரணமாக இந்த வாக்குறுதிகளை இந்த அரசின் முதல் ஆண்டில் செயல்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது. இருப்பினும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுள்ள பயனாளிகளை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கண்டறிந்து பயன்கள் அவர்களை சரியாக சென்றடையும் வகையில் திட்டத்தை வடிவமைப்பதற்கான பணிகள் முழு முனைப்புடன் நடைபெற்று வருகின்றன.
இதன் அடிப்படையில், இந்த அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளின் காரணமாக நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளிக்கிறேன்.
மேலும் படிக்க...
கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!
Share your comments