இயற்கையையும், விவசாயத்தையும் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு, பல்வேறு பசுமை அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். தற்போது, இது அதிகரித்து வருவது நல்ல முன்னேற்றம் ஆகும். அவ்வகையில், சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சார்பில், சென்னை சிட்லபாக்கத்தில், மியாவாகி (Miyawaki) முறையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
மரக்கன்றுகள் நடுதல்:
சென்னை, குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கத்தில், மத்திய அரசின், உணவு பொருள் பாதுகாப்பு கிடங்கு உள்ளது. இங்கு, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த, தன்னார்வலர்கள் (Volunteers) சார்பில், 'மியாவாகி' முறையில் மரக்கன்றுகள் நடும் பணிகள், கடந்த, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடந்தன. இரண்டு நாட்களாக நடந்த, மரக்கன்று நடும் பணிகளில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
மரக்கன்று வகைகள்:
பூவரசு, பலா, அகத்தி, இலவம் பஞ்சு, தான்றிக்காய், நாகலிங்கம், நீர்மருது, புங்கன், வேம்பு, நாவல், புளிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மொத்தம், 177 மரக்கன்றுகள், 'மியாவாகி' முறையில் நடப்பட்டுள்ள நிலையில், தீபாவளிக்கு (Deepavali) முன், கூடுதலாக, 100 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இந்த தன்னார்வ அமைப்பினர், சானடோரியத்தில் உள்ள, பச்சை மலையின் (Green Mountain) பசுமையை பாதுகாக்கும் வகையில், அந்த மலையை சுற்றியும், சில தினங்களுக்கு முன், புங்கன், வேம்பு (Neem), நாவல், நில வேம்பு மற்றும் புளிய மரங்களின் விதை பந்துகளை (Seed balls) வீசியது குறிப்பிடத்தக்கது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம்: தமிழகத்திற்கு முதலிடம்
பின்னலாடை தொழில் துறைக்கு, மானியத்தோடு தனி வாரியம் அமைக்க கோரிக்கை!
கடலூரில் உணவு பூங்கா அமைக்க ஏற்பாடு! முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!
Share your comments