1. செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் போன்றவற்றிற்கு தடை

KJ Staff
KJ Staff
Water ATMs

சுகந்திர தினமான ஆகஸ்ட் 15- ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. அதற்கு மாற்றாக 70 தண்ணீர் ஏ.டி.எம்கள் திறக்கப்படவுள்ளது. மேலும்  சென்னை உயர்நீதி மன்றம் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

தமிழக அரசு  14 வகையான  பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை  விதிக்கப்பட்டது நாம் அறிந்ததே. தற்போது  நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சிக்கு உதவும் வகையில் கூடுதலாக மேலும் சில வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றமும்  உத்தரவிட்டு உள்ளது.

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் நெகிழி கழிவுகள் சுற்றுப்புற சூழலை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அங்குள்ள வனப்பகுதிகள், நீர்நிலைகள், அங்கு வாழும் வன விலங்குகள் என  அனைத்தும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை விதிக்க பட்டுள்ளது. இருப்பினும் முழுமையாக ஒழிக்க முடியாத நிலை நீடிக்கிறது.

Nilgiris District Collector, J. Innocent Divya

லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் நீலகிரி மாவட்டத்தில்  பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது சற்று சவாலான விஷயமாகவே உள்ளது. வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் பயன்படுத்திய  வாட்டர் பாட்டில், குளிர்பானங்கள், தின்பண்டங்கள் போன்ற பிளாஸ்டிக் குப்பைகளை சாலைகளிலும், வன பகுதிகளிலும் வீசிச் செல்கின்றனர்.

நீலகிரி மாவட்ட ஆட்சியார் திவ்யா பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக சில அதிரடி நடைவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். முதற்கட்டமாக சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் 70 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய மற்றும்  மாநில நெடுஞ்சாலைகளை யொட்டி அமைந்துள்ள இடங்களில் இந்த குடிநீர் ஏடிஎம்.,கள் நிறுவப்பட்டு வருகின்றன.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட 10 இடங்களிலும், குன்னூர் நகராட்சியில் 4 இடங்களிலும், கூடலூர் நகராட்சியில் 6 இடங்களிலும், நெலாக்கோட்டை நகராட்சியில் 4 இடங்களிலும், 11 பேரூராட்சிப் பகுதிகளிலும், சுற்றுலாத் துறை சார்பில் தொட்டபெட்டா, ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகிய இடங்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட மாவட்டத்தல் 70 குடிநீர் ஏடிஎம்., மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த குடிநீர் ஏடிஎம் வரும் 15ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர இருப்பதால் இது குறித்த விழிப்புணர்வு வரும் 10 ஆம்  தேதி முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினருக்கும் கொடுக்கப் படவுள்ளது என்றார்.  இயந்திரந்தில் ரூ.5 காயின் செலுத்தினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் பெற முடியும்.  இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு கனிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளது என கூறினார்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Plastics Banned In Nilgiris: Collector J. Innocent Divya Has Taken An Action Against Plastic Usage

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.