பி.எம் கிசான் திட்டத்தின் 8 வது தவணை அண்மையில் பிரதமர் மோடியால் விடுவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இது வரை பணம் வரவில்லை என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான்...
பி.எம் கிசான் திட்டம்
பி. எம் கிசான் நிதி திட்டம் என்பது மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவி திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு 6,000 வருமான உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்குத் தகுதியான விவசாய குடும்பங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடையாளம் கண்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் வரவு வைக்கப்படுகிறது.
இதற்கான முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையும் மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. இதுவரை 7 தவணைகள் விடுவிக்கப்பட நிலையில் 8-வது தவணை எப்போது விடுவிக்கப்படும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
8வது தவணை விடுவிப்பு
இந்நிலையில் விவசாயிகளுக்கான 8 ஆவது தவணைக்கான நிதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 14ம் தேதி காணொலி காட்சி வாயிலாக விடுவித்தார். இதன்படி 9.5 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு பணம் வரவில்லையா?
பி.எம் கிசான் திட்டத்தில் விண்ணப்பித்துள்ள அனைவரின் வங்கி கணக்குகளில் இந்த தொகையானது நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. உங்களுக்கு பி.எம் கிசான் திட்டத்தின் பணம் வரவில்லை என்றால் கீழ் உங்கள் மாவட்ட வேளாண் அலுவலகத்தை தொடர்புக்கொண்டு உங்களின் நிலை குறித்து அறியலாம்.
அங்கு முறையான தகவல் கிடைக்கவில்லை என்றால் கீழே வழங்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு மத்திய வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்கள் நிலை குறித்து அறியலாம்.
PM-Kisan ஹெல்ப்லைன் எண்கள்
பி.எம்-கிசான் ஹெல்ப்லைன் - 155261
பி.எம்-கிசான் ஹெல்ப்லைன்(இலவசம்) - 1800115526
லேண்ட்லைன் எண்கள் - 011-23381092, 23382401
Email - pmkisan@gov.in
மேலும் படிக்க..
PM Kisan: 8-வது தவணை நிதியை விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி - 9.5 கோடி விவசாயிகள் பயன்!!
Share your comments