PM -Kisan முறைகேடு தொடர்பான விசாரணையில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.46 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டம் (Central Government Scheme)
பிரதமரின் கிசான் சம்மான் நிதி (PM-Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான 6-வது தவணையை கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில், விவசாயிகள் போர்வையில், போலியான நபர்களை தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் சேர்ந்து முறைகேடு செய்திருப்பது அம்பலமானது. இந்த முறைகேடு தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, முறைகேடாக அளிக்கப்பட்டத் தொகை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயி அல்லாதவர்கள் போலியாக சேர்க்கப்பட்டிருப்பது குறித்து விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரம் பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 57 பேரும் முறைகேடாக சேர்ந்து பணம் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இவர்களை கண்டறிந்து அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையை திரும்ப பெறும் பணியில் வேளாண் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரூ.46 கோடி பறிமுதல் (Rs.46 crore Recoverd)
இதில், இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் 48 ஆயிரத்து 190 பேரின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அந்த கணக்குகளில் இருந்து ரூ.15 கோடியே 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு அந்த தொகை அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அதுபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 93 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.30 கோடி வரை திரும்ப பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.45 கோடியே 70 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
PM KISAN முறைகேடு :மேலும் 4 பேர் கைது- வெளிமாநிலத்தவர் சேர்க்கப்பட்டிருப்பதும் அம்பலம்!
Share your comments