பிரதமரின் கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து விவசாயிகள் புகார் அளிக்க ஏதுவாக சிபிசிஐடி போலீசார், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை வெளியிட்டுள்ளனர்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி (PM-Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாயாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இந்த பணம் செலுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் பயன் பெறுபவர்களில் ஆயிரக்கணக்கானோர் விவசாயிகள் என்ற பெயரில் முறைகேடாக பணம்பெற்று வந்தது தெரியவந்தது.இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணமும் திரும்ப பெறப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த முறைகேடு நடந்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விவசாயிகள் தயக்கமின்றி புகார் அளிக்க ஏதுவாக, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தொலைபேசி - 044 2851 3500, தொலை நகல் - 044 2851 2510, வாட்ஸ் அப் - 94981 81035 மின்னஞ்சல் - cbcid2020@gmail.com ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க...
தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
அம்மை நோயில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? இயற்கை முறை மருத்துவம்!
Share your comments