தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரிவுபடுத்தும் முயற்சிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஈடுபட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) வலியுறுத்தி உள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்
கொரோனா வைரஸ் தடுப்பூசியை (Corona Virus Vaccine) மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இதை ஆய்வு செய்ய, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் குறித்து, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் விபரங்கள் அவரிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் மாவட்டத்திற்குள் - மாவட்டங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்து
தடுப்பூசி விவரம்
கடந்த ஆறு நாட்களில் மக்களுக்கு, 3.77 கோடி தடுப்பூசி 'டோஸ்'கள் (Dose) செலுத்தப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை, மலேஷியா, சவுதி அரேபியா மற்றும் கனடாவின் மக்கள் தொகையை விட அதிகம். நாட்டில் உள்ள, 128 மாவட்டங்களில், 45 வயதுக்கு மேற்பட்டோரில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 16 மாவட்டங்களில், இதே வயதில், 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.
தன்னார்வ தொண்டு நிறுவனம்
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரிவுபடுத்தும் முயற்சிகளில், என்.ஜி.ஓ., (NGO) எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், இதர அமைப்புகளும் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை, பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மேலும் படிக்க
கருப்பு பூஞ்சை நோயை சமாளிக்க தமிழகத்தில் மருத்துவ குழு தயார்!
ஜூலை 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! என்னென்ன தளர்வுகள்!
Share your comments