சொந்த வீடு என்பது நம்மில் பலரது கனவு. ஆனாலும் ராக்கெட் வேக விலையேற்றத்திற்கு மத்தியில், குறைந்த வருமானம் ஈட்டுபவர்களின் கனவு நிறைவேறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
அனைவருக்கும் வீடு 2022
இந்த சிக்கலைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரையும் சொந்த வீட்டில் அமர வைப்பதற்காகவே பிரதமரின் ஆகாஸ் யோஜனா என்றத் திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 2022ம் ஆண்டிற்குள் அனைவரும் வீடு என்பதே இந்தத் திட்டத்தின் இலக்கு. இதில் இரண்டு பிரிவுகள் உண்டு.
1. பிரதமரின் அவாஸ் யோஜனா அர்பன் (PMAY-U)
பிரதமரின் அவாஸ் யோஜனா அர்பன் (PMAY-U) திட்டத்தில் 4,331 போன்ற சிறு நகரங்கள் மற்றும் நகரங்களை கொண்டுள்ளன. நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம், தொழில்துறை மேம்பாட்டு ஆணையம், மேம்பாட்டு பகுதி, ஆகியவற்றின் மூலம், நகர்ப்புறங்களில் சொந்த வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது.
2. பிரதமரின் அவாஸ் யோஜனா (PMAY-G)
பிரதமரின் அவாஸ் யோஜனா கிராமின் (PMAY-G) முன்பு இந்திரா அவாஸ் யோஜனா என்று அழைக்கப்பட்டது, மார்ச் 2016-யில் மறுபெயரிடப்பட்டது. டெல்லி மற்றும் சண்டிகர் தவிர்த்து அனைத்து கிராமப்புற இந்தியாவிற்கும் சொந்தவீட்டைக் கட்ட விரும்புபவர்களுக்கு உதவுகிறது.
இதில், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா அர்பன் (PMAY-U) திட்டத்தின் கீழ், வீடு வாங்க, அதிகபட்சமாக 2.5 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
காலக்கெடு நீட்டிப்பு (Deadline Extended)
இதுவரை லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளநிலையில், இந்த திட்டத்தில் இந்த ஆண்டு விண்ணப்பிக்க விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை, 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மேலும் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து 114 நாட்களில் நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்துள்ளது. இதன்மூலம் விரைவில் மானியம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பெண்களுக்கு அதிகாரம் (Woman power)
குடும்பத்தின் தலைவியாக பெண்கள் உள்ள குடும்பம் அல்லது, கணவன்-மனைவி பெயரில் வீடு வாங்குவது என்பது இத் திட்டத்தின் கீழ் பயனடையக் கட்டாயம்.
எப்படி விண்ணப்பிக்கலாம்? (How to apply)
இத்திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புபவரா நீங்கள்? உங்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் (Required Documents)
-
பான் அட்டை
-
ஆதார் அட்டை
-
பாஸ்போர்ட்
-
ஓட்டுநர் உரிமம் அல்லது அரசால் வழங்கப்பட்ட புகைப்படம் இடம்பெற்றுள்ள அடையாள அட்டை
-
2 மாத வருமான சான்று (Salary Slip)
-
6 மாத வங்கி ஸ்டேட்மென்ட்
-
வருமானவரித் தாக்கல்
ஆன்லைனில் விண்ணப்பித்தல் (Apply By Online )
http://pmaymis.gov.in. என்ற இணையதளத்திற்கு சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, ஆவணங்களை பதிவேற்றம் செய்து, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பஞ்சகவ்யா விற்பனைக்கு! விவசாயிகள் கவனத்திற்கு!
Share your comments