பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதன் அடிப்படையில், மகளிர் நலனிலும் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதாவது பெண்களை சுயதொழில் செய்பவர்களாக, சொந்தக்காலில் நிற்பவர்களாக மாற்றுவதற்காகவும், குறிப்பாக கொரோனா நெருக்கடி காலத்தில் வறுமையில் இருந்து குடும்பங்களைக் காப்பாற்றும் வகையிலும், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டமே PM Free Silai Machine Yojana திட்டம்.
திட்டத்தின் நோக்கம்
குடும்பத்திற்கு 2-வது வருமானத்தை ஈட்டுவதுடன், பெண்களைக் கைத்தொழில் உள்ளவர்களாக மாற்றுவதுமே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
திட்டத்தின் பயன்
இந்த திட்டத்தின்படி கிராமப்புற மற்றும் நகர்புறங்களைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனைக் கொண்டு வீட்டில் இருந்தே சுயதொழில் செய்து கணவருக்கு பொருளாதார ரீதியில் உதவலாம்.
50,000 பெண்கள் இலக்கு
PM Free Silai Machine Yojana திட்டத்தின்படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், தகுதிவாய்ந்த 50 ஆயிரம் பெண்களைத் தேர்வு செய்து தையல் இயந்திரங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் நிலை மேம்படுத்தப்படும் என நம்பப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி பயன்பெற, இதுவரை, ஹரியானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், குஜராத், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
தகுதி
-
20 முதல் 40 வயதிற்கு உட்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் படி பயன்பெற தகுதி பெற்றவர்கள்.
-
அந்த பெண்ணின் கணவனின் ஆண்டு வருமானம் 12,000த்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
-
இதைத் தவிர பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
-
கணவனை இழந்த விதவை பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் இந்த திட்டத்தின்படி பயன்பெறமுடியும்.
திட்டத்தின்பயன்
இலவச தையல் இயந்திரம் பெற்றுள்ள பெண்கள், சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் அரசின் தையல் திட்டங்களை டெண்டர் மூலம் பெற்று தைத்துக் கொடுக்கலாம். இதன்மூலம் நல்ல வருமானத்தை ஈட்டமுடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இலவச தையல் இந்திரம் திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள், https://www.india.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். அதில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தங்கள் விபரங்களைப் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அவற்றுடன் பின்வரும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
ஆதார் அட்டை
பள்ளி சான்றிதழ் (வயதைத் தெரிந்துகொள்ள)
வருமான சான்றிதழ்
அடையாள அட்டை
மேலும் படிக்க...
மாட்டுச் சாணத்தில் இருந்து குளியல் சோப், டீ - வியப்பூட்டும் விபரங்கள்!
வயலில் பதுங்கியிருக்கும் எலிகள்-கட்டுப்படுத்தக் கச்சிதமான வழிகள்!
Share your comments