போக்குவரத்து விதிகளில் அரசு பல்வேறு மாற்றங்களையும், திட்டங்களையும் உருவாக்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகைகளில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளதையும், தொகை அதிகரிப்பையும் அரசு வெளியிட்டிருந்தது.
விதி மீறல்களில் ஈடுபடும் ஓட்டுனர்களின் மீது போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர். பணமாக பெறப்பட்ட அபராதத் தொகை பணமில்லா பரிவர்த்தனையாக "ஸ்வைப்பிங் இயந்திரம்” (swiping Machine) மூலம் பெறப்பட்ட வருகிறது. மேலும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் நேரடியாக நீதிமன்றத்தில்தான் அபராதம் செலுத்த முடியும்.
தற்போது இதே போல் போக்குவரத்து விதிமீறல்களையும், குற்றங்களையும் குறைக்கும் வகையில் சென்னை போக்குவரத்து போலீசார் "பாயின்ட் சிஸ்டம்" (Point System) என்ற புதிய விதிமுறையை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளனர்.
பாயின்ட் சிஸ்டம் (Point System)
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் போக்குவரத்து விதி மீறல்கள் அதிகம் காணப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிக ஆட்கள் அமர்ந்து செல்வது, ஹெல்மெட் அணியாதது, சீட் பெல்ட் போடாதது, அதிக வேகம், உட்பட்ட பல்வேறு விதிமீறல்களையும், குற்றங்களையும் குறைக்கும் வகையில் இந்த "பாயின்ட் சிஸ்டம்" விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதில் விதியில் மொத்தம் 10 புள்ளிகள் (10 points) உள்ளன. மீறப்படும் ஒவ்வொரு விதிகளுக்கும் 2 புள்ளிகள் வழங்கப்படும். 10 புள்ளிகளுக்கு மேல் பெற்ற வாகன ஓட்டுனரின் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ ரத்து செய்யப்படும்.
மேலும் இந்த விதிமுறையானது பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்த போக்கு வரத்து விதையை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாகவும், அதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
https://tamil.krishijagran.com/news/read-the-revised-list-of-penalties-for-traffic-violation/
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments