சில நாட்களுக்கு முன்பு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது அதனை தொடர்ந்து தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. மேலும் இது குறித்த அரசாணை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9ஆம் வகுப்பு மதிப்பெண்களை கொண்டு மாணவர்கள் சேர்க்கை நடத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2020-21 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தவில்லை என்பதால் அனைவருக்கும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண்கள் விவரம் இருக்காது என்றும் தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களது ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்கள் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
“2021 22 ஆம் கல்வி ஆண்டில் கொரோனா பெருந்தொற்றினை கருத்தில் கொண்டு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை பதிவை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இணையதளம் வாயிலாக மேற்கொள்ள அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் உயர்கல்வித்துறை அமைச்சர் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்கக அலகு அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட கூட்டத்தில், தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்பில் சேர்வதற்கான கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி என்றிருந்த போதிலும், 2020 – 21 ஆம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு இறுதித் தேர்வு நடத்துவது கொரோனா காரணமாக கைவிடப்பட்டதை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டயப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை செய்து கொள்ளலாம்” என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுமதி வழங்கி, உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பிளஸ்-1 மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்!!
TNAU மாணவர் சேர்க்கையை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இங்கே!!
+2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை!! - தமிழக அரசு அறிவிப்பு
Share your comments