பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை கண்காணிக்க, மாவட்டங்களுக்கு கூடுதல் அதிகாரிகளை நியமித்து, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு 2.15 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மளிகை, கரும்பு (Sugarcane) உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்க உள்ளது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜனவரி 4) துவக்கி வைக்கிறார்.
கடைகளில் ஆய்வு (Inspection in stores)
தகுதியான கார்டுதாரர்களுக்கு சரியாக பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்ய, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுஉள்ளது. அதில் மாவட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் வட்ட அளவில் 10 - 15 கடைகளில் ஆய்வு மேற்கொள்ள, துணை ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் நியமிக்கப்பட்டு உள்ளார். இது தவிர தற்போது, பரிசு தொகுப்பு விநியோகத்தை கண்காணிக்க, இரண்டு - மூன்று மாவட்டங்களுக்கு ஒரு கூடுதல் பதிவாளர் என, மொத்தம் 12 பதிவாளர்களை கண்காணிப்பு அலுவலராக நியமித்து, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு (Pongal Gift pack)
பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, வெல்லம், ரவை, கோதுமை மாவு; தலா அரை கிலோ பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு; 200 கிராம் புளி; 250 கிராம் கடலை பருப்பு; தலா 100 கிராம் நெய், மஞ்சள் துாள், மிளகாய் துாள், மல்லி துாள், கடுகு, சீரகம்.21 பொருட்கள்மற்றும் தலா 50 கிராம் முந்திரி, திராட்சை, மிளகு; 10 கிராம் ஏலக்காய், முழு கரும்பு ஆகியவற்றுடன் ஒரு துணி பை என, 21 பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
மேற்கண்ட அனைத்து பொருட்களும் சரியாக வழங்கப்பட்டு உள்ளதா என்பதை கார்டுதாரர்கள் உறுதி செய்த பின்தான் கடைகளை விட்டு நகர வேண்டும். வீட்டிற்கு சென்ற பின் ஏதேனும் பொருட்கள் இல்லை என்று திரும்ப வந்து கேட்டால், ரேஷன் ஊழியர்கள் வழங்க வாய்ப்பில்லை.
மேலும் படிக்க
பொங்கல் பரிசுத் தொகுப்பு: சுழற்சி முறையில் விநியோகம்!
பொங்கல் பண்டிகைக்கு கொள்முதல் செய்ய பன்னீர் கரும்புகள் தயார்!
Share your comments