பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பில் ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அரிசி, பருப்பு, வெல்லம், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட மளிகை பொருட்களுடன் வேட்டி, சேலையும் வழங்கப்படும். பயனர்களுக்கு அந்தந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு சுமார் 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
பொங்கல் பரிசு (Pongal Gift)
2023-ம் ஆண்டு பொங்கல் பரிசு வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இம்முறை பொங்கல் பரிசாக பணம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக குடும்ப அட்டை- வங்கிக் கணக்கு இணைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அ.தி.மு.க ஆட்சியில் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு விவரங்கள் இல்லை. குடும்ப அட்டைதாரர்கள் பலருக்கு வங்கி கணக்குகள் இருந்தும், ஆதார் இணைக்கப்படாததால் வங்கி கணக்கு இல்லை என தரவுகள் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, இது குறித்த விவரங்களை அந்தந்த பகுதி ரேஷன் பணியாளர்கள் பெற்று இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14,86,000 குடும்ப அட்டைதார்களின் விவரங்கள் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவைகள் குறித்து சம்பந்தப்பட்ட மண்டல இணைப்பதிவாளர்களுக்கு ஏற்கனவே அனுப்பபட்டுள்ளது.
வங்கி கணக்கு உள்ளவர்கள்
அந்ததந்த பகுதி ரேஷன் கடைப் பணியாளர்கள், பயனர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஏற்கனவே பயனர்கள் வங்கி கணக்கு இருந்தால், அந்த வங்கி கணக்கு பாஸ் புக்கின் முதல் பக்க நகல் மற்றும் அதில் குடும்ப அட்டை எண், குடும்பத் தலைவர் எண் குறிப்பிட்டு வாங்க வேண்டும். அதனை பெற்று பணியாளர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
வங்கி கணக்கு இல்லாதவர்கள்
வங்கி கணக்கு இல்லாதவர்கள் முதலில் அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்க வேண்டும். பின் அதன் விவரங்களை ரேஷன் பணியாளரிடம் கொடுத்து இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வங்கிப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை: இதை மட்டும் செய்யாதிங்க!
வங்கி கணக்கில் ரூ.1,000 பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments