பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் சிறப்புத் தொகுப்பை, ரேஷன் அட்டை தாரர்கள் வரும் 31ம் தேதி வரைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு (Pongal gift)
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, பொங்கல் வைக்கத் தேவையான, பச்சரிசி, முந்திரி, ஏலக்காய், திராட்சை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படுவது வழக்கம். அத்துடன் ரொக்கத்தொகையும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை, சில மாற்றங்களைப் புகுத்தியுள்ள திமுக அரசு, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பை வழங்குகிறது.
விநியோகம் (Distribution)
பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின் அனைத்து நியாயவிலை கடைகளிலும் தற்போது 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பை வழங்குகிறது.
31ம் தேதி வரை (Until the 31st)
ரொக்கத்தொகை இல்லாதது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏமாற்றமே என்ற போதிலும், தொகுப்பு வழங்கத் தொடங்கிய நாள் முதல் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
அமைச்சர் தகவல் (Minister Information)
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவுத்துறை மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
புகார்கள் (Complaints)
6 ஆம் தேதி வரை 43 லட்சத்து 85 ஆயிரத்து 111 அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுள்ளனர். சில இடங்களில் சில பொருட்களை விட்டுவிட்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இது போன்றப் புகார்களை தவிர்க்க அனைத்து பொது விநியோக திட்ட அங்காடிகளில் பொருட்களின் பட்டியலை வைக்கவும், பொருட்களைப் பெறுபவர்களிடம் அனைத்து பொருட்களும் உள்ளதா என்பதை சரிபார்க்கவும் கேட்டுக் கொள்ள வேண்டும் .
ஒன்றிணைந்து (Together)
பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களும், மேற்பார்வையாளர்களும் ஒன்றிணைந்து இந்த பணியை எந்த வித புகாருக்கு இடமின்றி செய்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், தொடர்புக்கு
பொங்கல் பரிசு இன்று முதல் விநியோகம்: கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்!
Share your comments