1. செய்திகள்

Nota பாணியில் வடகிழக்குப் பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - CM Stalin

Deiva Bindhiya
Deiva Bindhiya
Precautionary measure for Northeast Monsoon in Nota style - CM Stalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட பிரச்சனைகள் ஒர் பார்வை.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் எல்லாம் மேற்கொள்ளப்படவேண்டிய வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு துவக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்று கேட்டுக் கொள்விடுத்தார்.

மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும், வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை, வேளாண் துறை ஆகிய பல்வேறு துறை அலுவலர்களும் தனித் தனியாக இயங்காமல், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார் முதலமைச்சர். அரசுத் துறையுடன் சேர்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய சூழலை, நீங்கள் உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் முதலமைச்சர். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய குடியிருப்பு சங்கங்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் அது நல்ல பலன் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் கூறினார் முதலமைச்சர்.

ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கடந்த முறை வானிலை எச்சரிக்கைத் தகவல்களைக் குறித்த காலத்தில் பெறுவதில் தாமதங்கள் காணப்பட்டது. அதனைத் தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு உரிய காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து சரியான தகவல்களை பெறுவதோடு தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் அளிக்கும் தரவுகளையும், வருவாய்த் துறையில் ஒப்பிட்டு அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான அறிவிப்புகளைச் நீங்கள் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் முதலமைச்சர்.

நிவாரண மையங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என முதலமைச்சரின் வலியுறுத்தல்:

நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, அவர்களுக்குத் தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் நாம் கவனமெடுத்து செயல்பட்டால், கடும் மழையினால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய மக்கள், உழவர்கள், மீனவர்கள் போன்றவர்கள் அவர்களுக்கு ஏற்படக்கூடிய துயரை, ஓரளவுக்கு குறைக்க முடியும். செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் ஏற்கனவே போதிய அளவில் நீர் இருப்பு உள்ளதால், பருவமழையையொட்டி இந்த ஏரிகளின் நீர்வரத்து, நீர் இருப்பு அளவு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து, அதை முறையாக கையாள வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் அவர், மழைக் காலத்தின்போது நகர்ப்புறங்களில் மின்கம்பிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் தடுப்புகளின்றி இருப்பது விபத்துகளை ஏற்படுத்தக்கூடும். அதுமட்டுமின்றி, கடும் போக்குவரத்து நெரிசலையும் அவை ஏற்படுத்திவிடுகிறது. எனவே, மழைவெள்ளத் தடுப்பு தொடர்பாக துவக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே முடிக்க, அமைச்சர் முனைப்புடன் செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

கூடுதலாக அவர், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களும் (Monitoring Officers) மழைக்காலத்திற்கு முன்பாக ஓரிரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் சென்று அதை பார்வையிட வேண்டும். அந்த மாவட்டத்திலேயே தங்கி, பள்ளிக் கட்டடங்கள் மற்றும் நிவாரண மையங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

• பொதுத் தொலைபேசி எண்களைப் பரப்ப வேண்டும்.
• நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். .
பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
• மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
மொத்தத்தில் மக்களைக் காக்க வேண்டும்.

ஆகவே, அமைச்சர்கள் அனைவரும் இதில் முழு கவனத்துடன், ஈடுபட வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க:

சின்ன வெங்காயம் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை

Empty stomach: உடற்பயிற்சி செய்ய முடியலையா..? இனிமேல் இதை பாலோ பண்ணுங்க..

English Summary: Precautionary measure for Northeast Monsoon in Nota style - CM Stalin Published on: 26 September 2022, 03:40 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.