இராமானுஜர் சிலை அமைந்துள்ள வளாகத்தில், அவர் வாழ்ந்த ஆண்டுகளை நினைவுகூறும் வகையில் 120 கிலோ தங்கத்தால் ஆன கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கருவறை அமைந்துள்ள அறையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதியன்று திறந்துவைக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
விசிஷ்டாத்வைதம் என்னும் வைணவத் தத்துவத்தை பரப்பிய வைணவ ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களில் மிகவும் முக்கியமானவர், இராமானுஜர் ஆவார். கி.பி 1017ஆம் ஆண்டில் தோன்றி சுமார் 120 ஆண்டுகள் வரை வாழ்ந்து வைணவ தத்துவத்தை நாடு முழுவதும் பரப்பிய பெருமை இவருக்கு உண்டு. ஜாதி வேறுபாடுள் இன்றி அனைத்து தரப்பு மக்களையும் சரிசமமாக பாவித்து, தீண்டாமை கொடுமை ஒழிய பெரிதும் பாடுபட்டவர்.
ராமானுஜருக்கு அனைத்து வைணவ கோயில்களிலும் கற்சிலைகள், ஐம்பொன்னால் ஆன சிலைகள் இருந்தாலும், குறிப்பாக மூன்று திருமேனிகள் மிகவும் சிறப்பானதாகும். அவை, தமர் உகந்த திருமேனி, தானுகந்த திருமேனி, தானான திருமேனி எனப்படும்.
தற்போது ராமானுஜருக்கு தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான ஷம்ஷாபாத்தில், சுமார் ரூ. 1000 கோடி செலவில், முழுக்க முழுக்க பக்தர்களிடம் வசூல் செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு, 216 அடி உயரத்தில் தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், பித்தளை என பஞ்சலோகம் எனப்படும் ஐம்பொன்னால் ஆன சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சமத்துவத்துக்கான சிலை என பெயரிடப்பட்டுள்ள இச்சிலையானது மெல்கோட் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள இராமானுஜரின் கற்சிற்பங்களை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஹைதராபாத்தின் புறநகர்பகுதியான ஷம்ஷாபாத்தில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில், 216 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிலையை இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். சிலை திறப்பதற்கான பூஜையில் தமிழகம், கேரளா, கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா மாநில வேத பண்டிதர்கள் பங்கேற்கின்றனர். மேலும் வரும் 14ஆம் தேதி வரை லட்சுமி நாராயண யாகம் நடைபெறுகிறது.
இவ்வளாகத்தில், 108 திவ்யதேசங்கள், பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் தமிழ்த் துறவிகளின் படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள வைணவ ஆலயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இச்சிலை வளாகத்தில் பத்ரா வேதி எனப் பெயரிடப்பட்டுள்ள 54 அடி உயரமுள்ள அடித்தளக் கட்டிடம், ஆராய்ச்சி மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம், பழங்கால இந்திய நூல்களை உள்ளடக்கிய நூலகம், கல்விக் கூடம், தியேட்டர் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
செய்தி: 10 ரூபாய்க்கு மதிய உணவு, நடிகர் கார்த்தியின் ஏற்பாடு! எங்கே?
இராமானுஜர் சிலை அமைந்துள்ள வளாகத்தில், அவர் வாழ்ந்த ஆண்டுகளை நினைவுகூறும் வகையில் 120 கிலோ தங்கத்தால் ஆன கருவறை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும். இக்கருவறை அமைந்துள்ள அறையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வரும் பிப்ரவரி 13ஆம் தேதியன்று திறந்துவைப்பார்.
மேலும் படிக்க:
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலையில் மீண்டும் சரிவு, விலை நிலவரம்!
Share your comments