1. செய்திகள்

தொடங்கியது தடுப்பூசித் திருவிழா- பொதுமக்களுக்கு பிரதமரின் 4 வேண்டுகோள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Prime Minister's 4 requests to the public!
Credit : TOI

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் வகையில், கொரோனா தடுப்பூசி திருவிழா துவங்கியுள்ள நிலையில், பொது மக்களுக்கு பிரதமர் மோடி 4 வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா 2-வது அலை சற்று தீவிரம் அடைந்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் நாள்தோறும் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

தடுப்பூசித் திருவிழா (Vaccine Festival)

இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவுரைப்படி இன்று முதல் ஏப்., 14 வரை 4 நாட்கள் தடுப்பூசித் திருவிழா கொண்டாடப்படுகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் தகுதி உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்து இருந்தார். மருத்துவமனைகள், தடுப்பூசி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டினர்.

பிரதமர் வேண்டுகோள் (Prime Minister's request)

இதனிடையே தடுப்பூசி திருவிழா தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், நாம் இன்று தடுப்பூசி திருவிழாவை துவங்குகிறோம். இதன் காரணமாக, நாட்டு மக்களுக்கு நான்கு விஷயங்களை கடைபிடிக்குமாறு வலியுறுத்துகிறேன்.

  • தடுப்பூசி போட உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுங்கள்.

  • கொரோனா சிகிச்சை பெற மக்களுக்கு உதவுங்கள்.

  • முக கவசங்கள் அணியுங்கள் மற்றும் மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.

  •  தொற்று கண்டறியப்பட்ட பகுதியை நுண் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றுங்கள்

இவ்வாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க....

கொரோனாத் தடுப்பு வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கவும்- தமிழக ஆளுநர் வேண்டுகோள்!

கொரோனா 2வது அலை : தமிழகத்தில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பொது முடக்கம் அறிவிப்பு!

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

English Summary: Prime Minister's 4 requests to the public! Published on: 11 April 2021, 12:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.