தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் 2500 ரூபாய் அடங்கிய பொங்கல் பரிசை (Pongal Gift) தங்களின் முகவரிக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடையில் மட்டுமே வாங்க முடியும்.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், அந்தத் தொகையை இந்த முறை ரூ.2500 பரிசாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
பொங்கலை முன்னிட்டு 2.10 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு தலா 2500 ரூபாய் ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பு ஜனவரி 4ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
இதற்கான டோக்கன்கள் (Tokens) ரேஷன் அட்டைதாரர்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன்' (One Nation One Ration) திட்டப்படி தமிழகத்திற்குள் வசிக்கும் ரேஷன் அட்டைதாரர்கள் மாநிலத்திற்குள் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், ரேஷன் பொருட்களை வாங்குவது போல பரிசு தொகுப்பையும் எந்த கடையிலும் வாங்க முடியுமா என்ற சந்தேகம் கார்டுதாரர்களிடம் எழுந்துள்ளது. ஏனெனில் பலரும் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வதால் அது போன்று அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து உணவுத் துறை அதிகாரி கூறுகையில், எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டத்தின் கீழ் கடைகளுக்கு ஏற்கனவே ஒதுக்குவதை விட 5 சதவீத பொருட்கள் கூடுதலாக அனுப்பப்படுகின்றன. அவற்றை வேறு அட்டைதாரர்கள் வாங்கவில்லை என்றாலும் கடையிலேயே இருக்கும். ரொக்க பணத்தை கையாள்வது சிரமம். கூடுதல் பணம் வழங்கினால் 'தொலைந்து விட்டது' என கூறவும் வாய்ப்புள்ளது.
எனவே அதை தடுக்கும் வகையில் அட்டைதாரர்கள் தங்களின் முகவரிக்கு ஒதுக்கட்ட ரேஷன் கடையில் தான் 2500 ரூபாய் பொங்கல் பரிசை வாங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
மாட்டுச் சாணத்திற்கு Advance Booking- நம்ப முடிகிறதா!
விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கடன் - பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்!
Share your comments