கொரோனா காலத்தில் பல்வேறு களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் (Volunteers) , சமூக அமைப்புகள் நகர்ப்புற ஏழை எளியோருக்கு உதவினர். அந்நேரம் மலைப்பகுதியில் வாழும் விவசாய மக்களைப் பற்றி நாம் சிந்தித்திருக்க மாட்டோம். அவர்களுக்கும் உதவி செய்யும் பொருட்டு மலைகளுக்கு பயணம் மேற்கொண்டு உதவிகளை செய்து வருகிறார் பழநி கல்லுாரி பேராசிரியர் தமிழ்நாயகம்.
மலைவாழ் விவசாய மக்களுக்கு உதவி:
பதினைந்து ஆண்டுகளாக பழநி அருகே அணைக்கட்டுகள், நீர்நிலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களை இளைஞர்கள், வனத்துறையினருடன் (Forest Department) இணைந்து துாய்மைப்படுத்தி வருகிறார் தமிழ்நாயகம். ஊரடங்கு காலத்தில் மலைப்பகுதிகளில் சிரமப்படும் விவசாய மக்களுக்கு உதவுமாறு வனத்துறையினர் இவரிடம் கேட்டனர். இதையடுத்து சேவை அமைப்பான "சேவாபாரதி"க்கு (Sevabharati) தமிழ்நாயகம் கோரிக்கை விடுத்தார். அவர்கள் அளித்த நிவாரணப் பொருட்களுடன், வனத்துறை, வருவாய் துறை மற்றும் சத்தியமங்கலம் அதிரடிப்படையினரின் தலைமையில் சேவையை துவக்கினார். மொத்தமுள்ள 80 மலைக்கிராமங்களில் 47 கிராமங்களுக்கு உணவுப் பொருள், போர்வை, துண்டு, சேலை என தேவையானவற்றை வழங்கினார்.
விதைப்பந்து வீசுதல், மரம் நடுதல்:
வனத்துறையினர் உடன் இணைந்து காடுகளில் விதைப்பந்து வீசுதல், மரம் நடுதல் (Plant trees) போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார். இது போன்ற சேவை காரியங்களைக் கண்ட, சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், தேசபக்தர்கள் அனைவரும் சேவாபாரதி மூலம் மலைக் கிராமத்தினருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
தமிழ்நாயகம் கூறியது:
நான் ஒருங்கிணைப்பு பணி மட்டுமே மேற்கொண்டு வருகிறேன். கொடைக்கானலை சுற்றி 20 மாவட்ட விவசாயிகள், மக்கள், இந்தமலையையே நம்பி உள்ளனர். நீர் ஆதாரத்தின் மூலமாக விளங்கும் கொடைக்கானல் மலையை, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பதன் மூலம் நீராதாரத்தை பெருக்க முடியும் என்றார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மத்திய அரசின் இலவச அரிசியை வாங்கி விட்டீர்களா? காலக்கெடு முடியப் போகிறது!
இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறியும் ஐந்தறிவு ஜீவன்கள்!
மண்வளத்தை மீட்டெடுக்க சுழற்சி முறை விவசாயத்தை கையிலெடுங்கள்!
Share your comments