தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் வாக்குறுதி குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததிலுருந்து தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. கொரோனா நிவாரணத் தொகை ரூ. 4000, பெண்களுக்கு நகரப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் மாதம் 1,000 ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதனை குறித்த அறிக்கை எப்போது அரசின் அறிவிப்பாக வெளிவரும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதை தொடர்ந்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார் மேலும் மக்களின் நலனுக்காக 4,000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இந்த உதவித்தொகை 99 சதவிகிதம் வழங்கப்பட்டது. பொருட்கள் வாங்காமல் விடுபட்டவர்களையும் கண்டறிந்து பொருட்கள் வழங்கப்படும்.
அதுபோன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் எந்த குறையும் இல்லாமல் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்” என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதற்கு முன்பாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல அறிவிப்புகள் செயல் வடிவம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
ரூ.4,000 கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!
ரூ.4000 கொரோனா நிவாரண நிதிவழங்கும் திட்டம் - நாளை ஸ்டாலின் முதல் கையெழுத்து!
Share your comments