மூன்று செயற்கைக் கோள்களுடன், 'பி.எஸ்.எல்.வி., - சி52' ராக்கெட், வரும் 14 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான 'இஸ்ரோ' (ISRO) பூமியை கண்காணிக்க, 'இ.ஓ.எஸ். 04' என்ற செயற்கை கோளை, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்து உள்ளது. இதன் எடை 1,780 கிலோ. இந்த செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., - சி52 ராக்கெட் வாயிலாக, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
பி.எஸ்.எல்.வி. - சி52 ராக்கெட் (PSLV - C52 Rocket)
இந்த செயற்கை கோளுடன், இரண்டு சிறிய செயற்கை கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. 'வரும் 14ம் தேதி காலை 5:59 மணிக்கு, பி.எஸ்.எல்.வி. - சி52 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்' என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
நடப்பு ஆண்டில் இஓஎஸ்-4 ரிசாட்-1ஏ மற்றும் இஓஎஸ்-6 ஓசோன் சாட்-3 ஆகிய 2 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ராக்கெட் மூலம் இஓஎஸ்-4 உட்பட 3 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
1710 கிலோ எடை கொண்ட ரிசாட்-1ஏ என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், மாணவர் செயற்கைக்கோளான இன்ஸ்பைர்சாட்-1 மற்றும் தொழில்நுட்ப விளக்கக் செயற்கைக்கோளான ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 3 செயற்கைகோள்களும் பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க
தமிழுக்கு முக்கியத்துவம்: அமெரிக்காவில் உதயமானது வள்ளுவர் தெரு!
சர்வதேச தலைவர்கள் பட்டியல்: பாரதப் பிரதமர் மோடிக்கு முதலிடம்!
Share your comments