JALLIKATTU BULL WHILE PLAYING
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு/மஞ்சுவிரட்டு/வடமாடு நிகழ்ச்சி நடத்த விழா ஒருங்கிணைப்பாளர்கள் 1 மாதத்திற்கு முன்னதாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும்,அனுமதி கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலினை செய்து, அரசிதழில் பதிவு செய்ய விழா நடைபெறுவதற்கு 20 தினங்களுக்கு முன்னதாக சம்மந்த ப்பட்ட கிராமம் மற்றும் விழா நடைபெறும் நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு அரசாணை பெறுவதற்கு 20 தினங்களுக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட கிராமம் மற்றும் விழா நடைபெறும் நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு அரசாணை பெறுவதற்கு கால்நடை பராமரிப்புத்துறை ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட வேண்டும் என அரசால் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது இதனை முறையாக பின்பற்ற வேண்டும்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவு முறையை மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் இணையத்தளம் வாயிலாக அறிமுகம் செய்யப்படவுள்ளது .இதனை காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையத்தளத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும். அதன்பேரில், உரிய ஆவணங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழின் அடிப்படையில், பரிசீலினை செய்து தகுதியான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை மாடுகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத்துறையை சார்ந்தவர்களும் அரசின் நிலையான வழிகாட்டு விதி முறைகளை கடைபிடித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு/மஞ்சுவிரட்டு/வடமாடு போன்ற நிகழ்ச்சிகளை பாதுகாப்பாகவும் அரசின் வழிகாட்டுதலின்படியும் சிறப்பாக நடத்திட போதிய ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு அவர்கள் கேட்டுக்கொண்டார்.
ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரிய விளையாட்டு, தமிழரின் போராட்டத்தினால் நமக்கு கிடைத்த மாபெரும் இன்பக்கணி. அதை போற்றி காக்கவேண்டியது நம் முதல் கடமை அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி நாம் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவோம்.
மேலும் படிக்க:
புத்தாண்டு பரிசாக 4% DA உயர்வு, மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்
Share your comments