ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கட்டு வாழை இலை ரூ.1,800க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆயுத பூஜையொட்டி நேற்று பூஜை பொருட்கள் வாங்க சென்னையில் கூட்டம் அலைமோதியது. மேலும் பூ பழங்கள் விலை கடுமையாக உயர்ந்தது. நவராத்திரி விழா அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படுகிறது. நவராதிரியின் ஒன்பதாவது நாள் பத்தாவது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கடவுளுக்கு பழங்கள், பூக்கள், பொரி போன்ற பொருட்கள் வைத்து வழிபடுவது வழக்கமாகும்.
ஆயுத பூஜை என்பதால் பழங்கள், பூக்கள் விற்பனை கிடு, கிடுவென விலை உயர்ந்தது. அந்த வகையில் ஒரு கட்டு வாழையின் விலை இப்பதிவில் காணுங்கள்.
பொதுவாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு, ஆண்டிப்பட்டி, மதுரை, வேலூர், தஞ்சாவூர், வத்தலகுண்டு, தேனி மற்றும் தூத்துக்குடி, ஆந்திர மாநிலம் கடப்பா ஆகிய பகுதிகளில் இருந்து வாழை இலை கட்டுக்குள் வருகிறது.
மேலும் படிக்க: அக்டோபரில் எத்தனை வங்கி விடுமுறைகள்: வங்கி வாடிக்கையாளர்களே உஷார்!
LIC ஆட்சேர்ப்பு 2022.. பட்டதாரிகளுக்கான சூப்பர் வாய்ப்பு!
வழக்கமாக 8,9 லாரிகள் மூலம் வாழை இலைகள் வருகின்றன. நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையொட்டி, நேற்று காலை கூடுதலாக 11லாரிகளில் வாழை இலை கட்டுக்குள் வந்துள்ளது. வாழை இலை வாங்க வியாபாரிகளும் பொதுமக்களும் அதிகமாக குவிந்தனர்.
இதன் காரணமாக நேற்று ஒரு கட்டு வாழை இலை ரூ.1,800க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒருதலை வாழையிலை ரூ.5க்கு விற்கப்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை வியாபாரிகள், கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை இலைகளை வாங்கி கொண்டு சில்லறை கடைகளில் ஒரு கட்டு வாழை இலை ரூ.2000க்கு விற்பனை செய்வதுடன் ஒருதலை வாழை இலை 10க்கும் விற்றனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
பண்டிகைகளை முன்னிட்டு பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?
Share your comments