1. செய்திகள்

2,400 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்: இலக்கு நிர்ணயம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Purchase of 2,400 tonnes of copra

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 2,400 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தேங்காய் சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரவை கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.105.90 என்ற விலைக்கு மத்திய அரசு கொள்முதல் செய்ய உள்ளது.

கொப்பரை கொள்முதல் (Purchase of Copra)

வேலூர் மற்றும் குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நடப்பு பருவத்தில் தலா 1,200 டன் வீதம் 2,400 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வருகிற ஜூலை மாதம் வரை செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார், வங்கிக்கணக்கு புத்தகம், நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழுடன் வேலூர் மற்றும் குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்து பயன்பெறலாம். விளைபொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண் வணிக துணை இயக்குனர், வேலூர், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

பாட்டி வைத்தியம் சரியா? என்ன சொல்கிறது மருத்துவ ஆராய்ச்சி!

தமிழகத்தில் முதல் முறையாக புலிக்குட்டிக்கு வனத்தில் பயிற்சி!

English Summary: Purchase of 2,400 tonnes of copra: Target set! Published on: 09 February 2022, 02:43 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.